திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் ’இல்லந்தோறும் குடிநீர் இணைப்பு’ தமிழக முதலமைச்சரின் அனைத்து வீடுகளுக்கும் தாமிரபரணி குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர், தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார். 7 பேரூராட்சிகளுக்கு 423 கோடி மதிப்பீட்டில் வீடுகள் தோறும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் இணைப்பு திட்ட இணைப்பு விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது. மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு உறுப்பினர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் பணகுடி எம்.சங்கர், தலைமை பொறியாளர்கள் கென்னடி ரோஸ்லின், கோபாலகிருஷ்ணன், பேரூராட்சி தலைவி தனலட்சுமி தமிழ்வாணன், எ.மணி, உலகம்மாள், சொரிமுத்து ஆகியோர் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.