கலைஞர் நூலகத்தை இளைஞர்கள், மாணவர்கள் தகுந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் சிறக்குமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்கலத்தில் ”கலைஞர் நூலகத்தை” தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை மக்கள் பயன்படும் வகையில் கொண்டாடும் விதமாக, சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் நம் இளைஞரணியை அறிவுறுத்தினார்கள்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூலகங்களை சட்டமன்ற தொகுதிகள் வாரியாக அமைத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வடக்கு மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்கலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ”கலைஞர் நூலகத்தை” இன்று திறந்து வைத்தோம்.

களப்பணிக்கு இணையாக அறிவுசார் பணிகளுக்கும் நம் இளைஞரணி என்றைக்கும் முன்னுரிமை கொடுக்கும் என்று இந்த நிகழ்வில் உறையாற்றினோம். மேலும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாசிசத்திற்கு பாடம் புகட்டிய திருப்பூர் மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தோம். கலைஞர் நூலகத்தை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தகுந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் சிறக்குமாறு கேட்டுக்கொண்டோம்,” என்று தெரிவித்தார்.