புதுக்கோட்டை வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்

புதுக்கோட்டை வருமான வரி அலுவலகம் சார்பில் இன்று மாலை 04.00 மணி அளவில் வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி விழிப்புணர்வுக்கூட்டம் வருமான வரி அலுவலர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருமான வரி அதிகாரி சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.  முன் கூட்டியே வரி செலுத்துவதன் அவசியம் குறித்தும் வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை ஏற்படுத்தியுள்ள புதியவசதிகள் குறித்தும், வருமானவரி அலுவலர்கள் உரையாற்றினர். தற்போது வருமான வரி செலுத்துவோர் வருமான வரி அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் இணைய வழி மூலமாக வருமான வரி விண்ணப்பம் தாக்கல் செய்யலாம். அதே போல வருமான வரி செலுத்தி வோரின் குறைகளை இணைய வழி மூலமாகவே தீர்வுகான வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக செலுத்தப்பட்ட வரித் தொகையை உடன் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவற்றைப் பயன்படுத்தி, பொது மக்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆண்டு வருமானத்திற்குரிய வரியை முறையாக கணக்கிட்டு வரி செலுத்தி வருமான வரி படிவங்களை உரிய காலத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டனர். இக்கூட்டத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள், பட்டய கணக்காளர் சங்க நிர்வாகிகள், வருமான வரி ஆலோசகர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.