புதுகை வரலாறில் மன்னர் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வார பயிற்சி இன்று நிறைவடைந்தது.
புதுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் புதுகை வரலாறு அலுவலகத்தில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் எம் ஏ ஆங்கிலம் படித்து வரும் மாணவர்களுக்கு ஜெர்னலிசம் (பத்திரிகை மற்றும் ஊடகம்) குறித்த பயிற்சி வகுப்பானது ஜூன் மூன்றாம் தேதியில் இருந்து ஜூன் எட்டாம் தேதியான இன்று வரை நடைபெற்றது.
கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கையையேற்று புதுகை வரலாறு ஆசிரியர் சிவசக்திவேல் தலைமையிலான செய்தி குழுவினர் பயிற்சியை அளித்தனர். பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு இன்று கல்லூரி ஆங்கிலத்துறைத்தலைவர் மேரி ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் அய்யாவு, கணேசன் முன்னிலையில் சான்று வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் 30 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர் தங்களுக்கு இந்த பயிற்சியானது மிகுந்த பயனுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். முன்னதாக மே மாதம் 6ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரையிலும் ஜெ.ஜெ கல்லூரி மாணவர்களும் இதே பயிற்சி வகுப்பில் பங்கேற்றிருந்தது குறிப்பிடதக்கது.