புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே மேலக்கோட்டை தக்கடிவயல் கிராமத்தில்ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி, ஸ்ரீ காளி, ஸ்ரீ சங்கிலி கருப்பர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர், ஸ்ரீ சாம்பான் ஆகிய ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஏராளமானோர் சாமி தரிசனம்.
ஆவுடையார் கோவில் அருகே மேலக்கோட்டை தக்கடிவயல் கிராமத்தில் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி, ஸ்ரீ காளி, ஸ்ரீ சங்கிலி கருப்பர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் மற்றும் முத்து சாம்பன் ஆகிய, ஆலய குடமுழுக்கு விழாவிற்கு கடந்த மூன்று நாட்களாக யாகாசாலை பூஜை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் மங்கல இசையுடன் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று சரியாக ஒன்பது முப்பது மணி அளவில் புனித நீரை சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கலசத்தை தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு கொண்டு சென்று புனித நீரால் குடமுழுக்கு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மேலக்கோட்டை தக்கடிவயல் கிராம ஊரார்கள் நடத்தினார்கள்.