செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களில் இருந்து செந்தில் பாலாஜி குற்றத்தில் ஈடுபடவில்லை என நம்புவதற்குரிய எந்தக் காரணமும் இல்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் சாட்சிகளை கலைக்கமாட்டார் எனும் வாதத்தை ஏற்க முடியாது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் பெற எந்த தகுதியும் இல்லை என்பதால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்ட வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் சென்னை அமர்வு நீதிமன்றம் முடிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞர் ராம் சங்கர் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; அமலாக்கத்துறை பதில் தரும் வரை விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். முதலில் பிறப்பித்த உத்தரவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்கட்டும்; விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. கீழமை நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரணையை முடிக்க இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பது தேவையற்றது எனக் கூறி விசாரணை ஏப். 29 தேதிக்கு ஒத்திவைத்தார்.