புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகாவில் உள்ள திருப்புனவாசல் காவல் சரகத்தில் உள்ள ஏனாதி கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் குடிதண்ணீர் குளத்தில் இரால் கம்பெனியில் உள்ள கழிவு பொருட்களான நண்டு ஓடு, இறால் ஓடு. கணவாய் ஓடு, போன்ற கழிவு பொருட்களை 300 குடும்பங்கள் வாழும் ஏனாதி குளத்தில் இரவோடு இரவாக இரால் கம்பெனி நடத்தும் சமூக விரோதிகள் குளத்தில் கொட்டி சென்றுவிட்டனர்.
இதனால் பல தொற்று நோய்கள் இதிலிருந்து உருவாகும் என்று பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக இந்த கழிவு பொருட்களை அப்புறப்படுத்தி விடுகிறேன் என்று கூறிய பின்னர், ஜேசிபி இயந்திர மூலம் கழிவு பொருட்களை அப்புறப்படுத்தினர். இருந்தாலும் இதன் பின்பு எதுவும் தொற்று நோய் உண்டாகுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கும் முறையாக அனுமதி இல்லாமல் செயல்படும் இரால் கம்பெனிகளை ஆய்வு செய்து சீல் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.