புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் மார்த்தாண்டபுரத்தில் இருந்து திருவருள் பேரவை நிர்வாகிகளின் தலைவர் சம்பத்குமார் தலைமையில் காலை 9 மணியளவில் மார்த்தாண்டபுரம் ஆர்.சி சர்ச்சுக்கு சென்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்விற்கு முன்னதாக புதுகை வரலாறு 2025 ஆம் ஆண்டு மாதாந்திர காலண்டர் விநியோகிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்து மதத்திலிருந்து திலகவதியார் ஆதினகர்த்தர் தயானந்த சந்திரசேகர் சுவாமிகள் கிறிஸ்தவ மதத்தில் இருந்து முன்னாள் மாவட்ட வர்த்தக கழக தலைவர் சேவியர் இஸ்லாமிய மதத்திலிருந்து பெரியவர் சபீயுதீன் ஆகிய மூன்று பேரும் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக புதுகை வரலாறு மாதாந்திரை காலண்டரை வெளியிட்டு அகம்மகிழ்ந்தனர்.
பின்னர் திருவருள் பேரவை நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மார்த்தாண்டபுரம் ஆர்.சி சர்ச்சுக்கு சென்று கிறிஸ்தவ மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ச்சியாக சர்சில் வழிபாடு செய்த அனைவருக்கும் புதுகை வரலாறு காலண்டர் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் புதுகை வரலாறு நாளிதழ் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மாதாந்திர காலண்டரை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த மற்றும் நடப்பு ஆண்டுகளைப் போல் வரும் 2025ம் ஆண்டு புதுகை வரலாறு காலண்டர் வெளிவருவதற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களும் பேக்கரி மஹராஜ் குழுமமும் பேருதவி அளித்துள்ளது இன்றைய புதுகை வரலாறு நாளிதழுடன் இக்காலண்டர் விலையின்றி இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.