நெற்பயிர்களை தாக்கும் ஆனைக்கொம்பன் நோய் அதிர்ச்சியில்  புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவிற்கு உட்பட்ட அமரசிமேந்திரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான மங்களநாடு விஜயபுரம்  உள்ளிட்ட ஒவ்வொரு பகுதிகளிலும் சுமார் 300 -க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் சாகுபடி செய்து 90 நாட்களைக் கடந்து நெற்கதிர் விடும் நேரத்தில் பயிர்களில் ஆனைக்கொம்பன் என்ற நோய் தாக்குதலால் அதிர்ச்சிக்குள்ளான விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயிர்கள் எதனால் பாதிக்கப்படுகிறது என்ன நோய் தாக்கியுள்ளது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பலமுறை விளக்கம் கேட்டும் தற்போது வரை தங்கள் பகுதிக்கு வேளாண்மைதுறை அதிகாரிகள் யாரும் வந்து நோயால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட வில்லை என்றும் நாங்கள் ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து நல்ல விளைச்சல் காணலாம் என நம்பிக்கையோடு காத்திருந்த நிலையில்  தற்போது பயிரில் நெற்கதிர் விடும் நேரத்தில் இந்த நோய் தாக்குதலால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் தை மாதத்திற்கு பிறகு எஞ்சிய  நெற்கதிரை அறுவடை செய்தால் ஏக்கருக்கு 5 மூட்டை கூட நெல் வர வாய்ப்பு இல்லை எனவும் ஆகவே போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல் பகுதிகளை பார்வையிட்டு உரிய ஆலோசனை கூறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருதி உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே தங்களுடைய வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்றும் தங்களுடைய அப்பா தாத்தாக்கள் காலங்களில் நெற்கதிர்களில் இது போன்று ஏற்படும் பாதிப்பிற்கு ஆனைக்கொம்பன் நோய் என்று கூறியுள்ளனர்.

ஆனால் இது எதனால் வருகிறது இதற்கு என்ன தீர்வு என்று கூட தெரியாமல் இருப்பதாகவும் இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து தெரிவித்தால் வருங்காலங்களில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் எங்களுக்கு ஏதாவது இழப்பீடு தொகை வழங்கினால் மிகவும் வாழ்வாதாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கடைமடை குதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.