புதுக்கோட்டை மாநகர  திமுக  செயலாளர்  செந்தில்  இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாநகர  திமுக  செயலாளர்  ஆ.செந்தில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானதை தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலம் புதுக்கோட்டையில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் திமுக  உள்ளிட்ட கூட்டணி கட்சியின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

புதுக்கோட்டை திமுக மாநகர செயலாளரும் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி அவருடைய கணவருமான ஆ.செந்தில் நேற்று காலை எட்டு மணி அளவில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இறந்து போன புதுக்கோட்டை மாநகர செயலாளர் ஆ.செந்தில் மாவட்ட பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார். திமுக இயக்கத்தில் ஆர்வத்துடன் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர் இவரது தந்தை ஆறுமுகம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இறந்தவர். இவரது இழப்பு புதுக்கோட்டை மாநகர திமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

புதுக்கோட்டை  பழைய அரசு தலைமை மருத்துவமனை அருகில் இருக்கும்  சாந்தனாதபுரம் ஒன்னாம் வீதியில் அவரது வீட்டில் இருக்கும்  உடலுக்கு  பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் புதுக்கோட்டை நகர பொதுமக்கள்  அஞ்சலி செலுத்தி வரும் சூழலில் நேற்று  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,  அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தொழிலதிபர் எஸ். முத்துபட்டிணம் எஸ்.ராமசந்திரன்,எம்.எல்.ஏ. முத்துராஜா,வடக்குமாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன்  உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி  வந்தனர். இன்றைய தினம் திமுக தலைமை கழகத்தின் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகளும்  கலந்து கொண்டு  இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர். காலை எட்டு மணி அளவில் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து  ஊர்வலமாக புறப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட இருக்கின்றது. மாநகரில் திறம்பட பணியாற்றி வர்த்தகர்களின் அன்பை பெற்று வந்த செந்திலுக்கு  மாவட்ட வர்த்தக கழகத்தின் சார்பில் காலை 11 மணி வரை இரங்கலை தெரிவிக்கும் வகையில்  கடையில் திறக்கப்பட மாட்டாது என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.