நங்கியப்பட்டு கிராமத்தில் பகுதி நேர அங்காடியை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நகரங்கியப்பட்டு கிராமத்தில் பகுதி நேர அங்காடியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று திறந்து வைத்தார்.

கறம்பக்குடி தாலுகா நரங்கியப்பட்டு கிராமத்தில் பகுதிநேர அங்காடி திறக்க வேண்டுமென்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை. இது குறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். அவரின் முயற்சியால் நரங்கிப்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை பகுதிநேர அங்காடி திறக்கப்பட்டது.

திறப்பு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமை வகித்தார். பகுதிநேர அங்காடியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். நிகழ்வில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், வட்டாட்சியர் எஸ்.ஜபருல்லா, ஒன்றியக்குழுத் தலைவர் மாலா ராஜேந்திரதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டெல்லா, திமுக ஒன்றியச் செயலாளர் முத்துகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.