புதுக்கோட்டையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திற்கு  அனைத்து கட்சியினர்  மலர் தூவி அஞ்சலி

புதுக்கோட்டையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திற்கு  அனைத்து கட்சியினர்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ். இளங்கோவன் திருவுருப்படத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் முருகேசன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் பெனட் அந்தோணி ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் இப்ராஹிம் பாபு, வட்டாரத் தலைவர் சூர்யா பழனியப்பன், மாவட்ட துணை தலைவர் வேங்கை அருணாச்சலம், நகரத் தலைவர்கள் மதன் கண்ணன், பாருக் ஜெய்லானி ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, கவுன்சிலர் சுப. சரவணன், ராஜா முகமது, கலைஅணித் தலவர் மேப் வீரையா, பொதுச்செயலாளர் மயில்வாகணன்,  மாவட்ட துணை தலைவர்கள் தீன், பழனிசாமி பாலாண்டார், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தமிழரசன், மதிமுக மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, நகர செயலாளர் கிருஸ்ணமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திருமறவன், ஷாஜஹான், மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அப்துல் கனி, மனித நேய ஜனநாயக கட்சி சார்பாக ரஹீம், எஸ்டிபிஐ கட்சி சார்பாக சலாவுதீன், அப்துல் மன்னான், சிபிஐ ( எம்)சார்பாக சங்கர், பாண்டியன், யுசிபிஐ சார்பாக ரமேஷ், அம்பிகாபதி கலைச்செல்வன், ஜான். சிபிஐ சார்பாக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுந்தர்ராஜன்,

பாஜக சார்பாக பிரசாத், சுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சி திருவரங்குளம் ஒன்றிய கவுன்சிலர் துரைக்கண்ணன், காதர் மைதீன், சோலை, மகாலிங்கம், மகளிர் அணி நிர்வாகிகள் கவுரி, சசிகலா, சித்ராக்கண்ணு, மஹாலக்ஷ்மி, சிவாஜி பேரவை சுப்பையா சிவாஜி, மன்றம் கனி, சுப்பிரமணியன், குமார் மக்கள் நீதி மய்யம் சார்பாக செந்தில்குமார், ஹக்கீம், நாம்தமிழர் கட்சி சார்பாக பொன்வாசிநாதன், அப்பாஸ் உள்பட ஏராளமானோர் பங்கேற்று மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.