கீழக்குறிச்சி எம்எஸ்ஏ பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கீழக்குறிச்சி எம்எஸ்ஏ பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சி எம்எஸ்ஏ பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அன்னவாசல் லயன்ஸ் சங்கம் மற்றும் கீழக்குறிச்சி எம்.எஸ்.ஏ. மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.

முகாமிற்கு பள்ளியின் முதல்வர் சாலைமாமணி தலைமை தாங்கினார். லயன்சங்க தலைவர் முககமது சாதிக்பாட்சா, செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மருத்துவக்கல்லூரி மருத்துவ குழுவினர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கண் சம்மந்தமான நேய்களுக்கு இலவச பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினர். மேலும் கண்பார்வை இல்லாதவர்களுக்கு இலவசமாக கண் விழி லென்ஸ் பொருத்துதல், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் கண் சம்மந்தமான இலவச மருந்து மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண் சம்மந்தமான சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர். பின்னர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த முகாமில் அன்னவாசல் லயன்சங்க துணை செயலாளர் ராபர்ட், பொருளாளர் ஜஸ்டின், உறுப்பினர் முகமதுபாரூக், மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.