புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடப் பணிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் அரிமளம் ஆகிய பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், புதிதாக கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடப் பணிகளை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் வாழும் பொதுமக்களின் நலன் மீது அதிக அக்கறைகொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கிராமப்புறங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் பொன்னமராவதி மற்றும் அரிமளம் ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், ஒருங்கிணைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின்கீழ் தலா ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

எனவே, தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்களை, தொடர்புடைய அரசு அலுவலர்கள் விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களிடம் கொண்டு சேர்த்திட வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, ஒன்றியக்குழுத் தலைவர்கள் சுதா அடைக்கலமணி (பொன்னமராவதி), மேகலாமுத்து (அரிமளம்), பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.ஆயிஷாராணி, எஸ்.ராமச்சந்திரன், அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.சரவணராஜா, எஸ்.பால் பிரான்சிஸ், வட்டாட்சியர் எம்.சாந்தா, மற்றும் இளையராஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.