வைத்திக்கோவில் ஆட்சி ஊரணியை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா குணாண்டார் கோயில் ஊராட்சி ஒன்றியம் வைத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த வைத்திக்கோவில் ஆட்சி ஊரணியை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

வைத்திகோவில் ஆட்சி ஊரணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தீர்த்தமாகவும் ஊர் கிராம பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது கடந்த சில வருடங்களாக தூர்வாரப்படாமலும் முப்புதர்கள் மண்டியும் மக்கள் பயன்பாடு இல்லாமல் இருந்தது. ஊராட்சி மன்ற தீபா நாகராஜ் முயற்ர்ச்சியில் கிராம மக்கள் ஒத்துழைப்போடு கிராமாலயா தொண்டு நிறுவனம் அமெரிக்க வங்கியின் உடைய சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சமும் கிராம மக்களின் பங்களிப்பாக ரூபாய் 40 ஆயிரமும் மொத்தம் அஞ்சு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயில் ஆட்சி ஊரணி தூர்வாரப்பட்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு இன்று முதல் மக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்டடு மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில். அமெரிக்க வங்கி சமூகப் பொறுப்பு நிதி மேற்பார்வையாளர் மதுஸ்ரீ டூ லேட் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நீதி இயக்குனர் கீதா ஜீவன் செந்தில்குமார் பிசிஓ கிராமாலயா தொண்டு நிறுவனம் ரேணுகாதேவி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் குன்னாண்டார் கோவில் கிராமாலயா தொண்டு நிறுவன அனைத்து ஒருங்கிணைப்பாளர்கள் மரம் அறக்கட்டளை நிறுவனர் மரம் ராஜா பொறுப்பாளர்கள் கார்த்திக் ,வைத்திக் கோவில் சிவக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் தீபா நாகராஜன் வைத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்கள்ல பணியாளர் சந்திரா பணித்தள பொறுப்பாளர்கள் அஞ்சலை  தேவி கௌசல்யா   மகளிர் சுய உதவி குழு ஊராட்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் வைத்திக்கோவில் கிராம முக்கியஸ்தர்கள் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.