குவைத்தில் தமிழ் ஓட்டுநர்கள் சேவை மையம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடந்தது

குவைத் நாட்டில் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு  குவைத் தமிழ் ஓட்டுநர்கள் சேவை மையம் சார்பில் 3-ம் ஆண்டு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாம் சால்மியா மெட்ரோ கிளினிக்கினிக் மற்றும்  ஃபாகில்  மெட்ரோ கிளினிக்கி ஆகிய இடங்களில் நடைபெற்றது இந்த இரண்டு மருத்துவ முகாமில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று பல்வேறு நாட்டை சேர்ந்த ஆயிரகணக்கான நபர்கள் கலந்துகொண்டு  பயனடைந்தனர்.

சால்மியா மெட்ரோ கிளினிக்கில் நடைபெற்ற முகாமில் தமிழகத்திலிருந்து காணொளி வாயிலாக சிறப்பு விருந்தினராக திராவிட முன்னேற்றக்கழக திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மருத்துவ முகாமில் நேரடியாக டிவிஎஸ் நிறுவனத்தின் சேர்மன் ஹைதர் அலி கலந்துகொண்டார்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் பல்வேறு ஊரை சார்ந்த ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை  சிறப்பித்தனர்.

ஃபாகில் மெட்ரோ கிளினிக்கில் நடைபெற்ற நிகழ்வில் தமிழகத்திலிருந்து காணொளி வாயிலாக வெளிநாடு வாழும் தமிழர் நல சங்கத்தினுடைய அமைச்சர் ஆவடி நாசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவரும் பாபநாசம் தொகுதி சட்ட உறுப்பினர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, அகமது ஜாசிம், முகமது மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாருக், மகாராஜா மற்றும் குவைத் நாட்டில் பல்வேறு அரசியல் கட்சி சார்ந்த நிர்வாகிகளும் தமிழ் அமைப்பு பிரதிநிதிகளும் மற்றும் ஊர் ஜமாத் நிர்வாகிகள் குவைத் தமிழ் ஓட்டுநர் சேவை மையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் முகாமில் கலந்துகொண்டு  சிறப்பித்தனர்

இதற்கான ஏற்பாடுகளை குவைத் தமிழ் ஓட்டுநர்கள் சேவை மைய முன்னாள் தலைவர் இந்நாள் ஒருங்கிணைப்பாளர். லால்குடி சையத்இமாம் ஜாஃபர்,குவைத் தமிழ் ஓட்டுநர்கள் சேவை மைய தலைமை ஆலோசகர் கோணுழாம் பள்ளம் அன்சாரி குவைத் தமிழ் ஓட்டுநர்கள் சேவை மைய தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துப்பேட்டை நைனாமுஹம்மது

குவைத் தமிழ் ஓட்டுநர்கள் சேவை மைய பொருளாளர் புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி ஜாபர்அலி, குவைத் தமிழ் ஓட்டுநர்கள் சேவை மைய செயலாளர் அஜிஸ்கான், குவைத் தமிழ் ஓட்டுனர் சேவை மைய மீடியா தலைவர் நாகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.