புதுக்கோட்டை மாவட்ட அளவிலான செஸ் போட்டி வைரம்ஸ் பள்ளியில் நடந்தது

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான ஏழு வயதுக்குட்பட்ட மற்றும் 11 வயதுக்கு உட்பட்ட இளம் சதுரங்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பிறகு ஓபன் மற்றும் மகளிருக்கான செஸ் போட்டி புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச சதுரங்கநடுவர் அங்கப்பன் மேற்பார்வையில் நடைபெற்றது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 150 க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். பரிசளிப்பு நிகழ்வில் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

கண்கவர் வெற்றி கோப்பைகளும் பண பரிசுகளும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக தமிழ்நாடு மாநில செஸ் போட்டியில் பங்கு பெறுவர் பரிசளிப்பு நிகழ்வில் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் முனைவர் கணேசன் அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர் அடைக்கலவன் நன்றி கூறினார்.