திலகவதியார் திருவருள் ஆதீன குருமுதல்வர் அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவியின் 26-ஆம் ஆண்டு குருபூசை விழா

Oplus_131072

முதல் பெண் ஆதீனகர்த்தராகவும், சமூகப்பணிகளை ஆற்றி வந்தவருமான திலகவதியார் திருவருள் ஆதீன குருமுதல்வர் சாயிமாதா சிவ பிருந்தாதேவியின் 26-ஆம் ஆண்டு குருபூசை விழா இன்று 8-12-2024 காலை 11.00 மணிக்கு அவரது அதிஷ்டானம் அமைந்துள்ள ஜீவா நகர் மூன்றாம் வீதியில் நடைபெற்றது.

குருவழிபாட்டினை திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் முன்னின்று நடத்தினார். மணிகண்டன் ஓதுவார் திருமுறை விண்ணப்பம் செய்தார். விழாவிற்கு சர்வஜித் அறக்கட்டளை தலைவர் டாக்டர் எஸ். இராமதாஸ், பணிநிறைவு பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவாஜி, வாசகர் பேரவை தலைவர் பேரா.எஸ். விசுவநாதன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் கவிஞர் ஆர்.எம்.வீ.கதிரேசன், பேரா. மு.பாலசுப்பிரமணியன், டாக்டர்.எஸ்.இராமமூர்த்தி, தமிழாசிரியர் கழக மேனாள் தலைவர் முனைவர். கு.ம.திருப்பதி, கவிஞர் நிலவை பழனியப்பன், டாக்டர்.சி.கோவிந்தராசன், புண்ணியமூர்த்தி, மத்தியாஸ், ஓய்வுபெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்,பாண்டியன், கலைச்செல்வன், வழக்கறிஞர் எம். ராஜா, செல்வராஜ், பா.முத்துக்குமார், பா.சீனிவாசன், நாடிமுத்து, சோலைபாப்பா பாலசுப்பிரமணியன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தெய்வானை வள்ளியம்மை அறக்கட்டளை செயலாளர் சுப்பிரமணியன், நல்லமுத்து இராமமூர்த்தி, ஆர்.ராணி, பிருந்தா அழகப்பன் திருவிளக்கேற்றினர். நிறைவாக மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.