புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட அலுவலர் பணியினை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூட்டம் தலைவர் ஏ.அசரப் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. தற்போது செயல்படும் மாவட்ட அலுவலகத்தில் பள்ளி தாளாளர்களின் கடிதங்களை தாமதமின்றி பெறுவதற்கு தபால்பெட்டி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆர்.டி.இ. 25% 2023-2024 மற்றும் 2024-2025 கல்விகட்டண தொகையினை உடனே உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. நர்சரி பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்த உரிய ஆணை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பத்து வருடங்களுக்கு மேல் அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாக்கப்பட தனி சட்டம் இயற்ற தமிழக அரசை கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒப்புதல் மற்றும் புதுப்பித்தல் நர்சரி பள்ளிகளுக்கு பெறும்போது DTCP ஆணை பெருவதிலிருந்து விலக்கு கோர இந்த கூட்டத்தில் வழியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில், செயலாளர் முத்துக்கருப்பன் அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் மேசியா சந்தோஷம் நன்றி கூறினார். தீமானங்களை ஒருங்கிணைப்பாளர் ரமணன் முன்மொழிந்தார். கூட்டத்தினை துணைத்தலைவர் மாதவன் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்வின் ஏற்பாட்டினை மீனாட்சி பள்ளி தாளாளர் ராஜ் மற்றும் கலைமகள் பள்ளி தாளாளர் பாண்டிசெல்வம் ஏற்பாடு செய்தனர். கூட்ட ஏற்பாட்டினை பெருங்களூர் வெங்கடேஷ்வரா பள்ளி தாளாளர் வெங்கடேஷ் மற்றும் மருதம் பள்ளி தாளாளர் தமிழ்மாறன் வடிவமைத்தனர். லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் செல்வக்குமார், மழையூர் நேரு பள்ளி ஆலோசகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.