கே.புதுப்பட்டியில் சூர்யா ஹெல்த் மருத்துவமனையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அடுத்த கே.புதுப்பட்டியில் சூர்யா ஹெல்த் மருத்துவமனையினை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து மருத்துவர் சுதர்சன் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருமயம் தாலுகா கே.புதுப்பட்டியில் சூரியா பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா இன்று நடந்தது. விழாவுக்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சூரியபிரகாஷ் தலைமைவகித்தார். அரிமளம் ஒன்றிய திமுக செயலாளர் பொன்.ராமலிங்கம், ஒன்றியக்குழு தலைவர் மேகலாமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர். சுதர்சன் வரவேற்றார். மருத்துவமனை கட்டடத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

விழாவில் திமுக மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் அண்ணாமலை, காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி, முன்னாள் எம்எல்.ஏ உதயம் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் கலைவாணி, திமுக பொதுக்குழு உறுப்பினர் சீனி.பழனியப்பன், அரிமளம் தெற்கு ஒன்றிய செயலர் இளையராஜா, ஆவுடையார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் துரை,  மணமேல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.சீனியர், திருவரங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல், திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகு சிதம்பரம், மாணவரணி அமைப்பாளர் கலை, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராமசாமி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சக்கரவர்த்தி,  திருமயம் ஒன்றிய கவுன்சிலர் ஆறு.சிதம்பரம், ஊராட்சி தலைவர் சாந்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய,  நகர நிர்வாகிகள், மருத்துவ, சுகாதாரப்பணிகள், அலுவலர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். மருத்துவ மனை இயக்குநர் டாக்டர். வினிதா நன்றி கூறினார்.

கே.புதுப்பட்டியில் இம்மருத்துவமனை திறக்கப்பட்டு இருப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தரமான மருத்துவத்திற்காக திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்களை நோக்கி செல்ல வேண்டிய சூழல் இருந்த நிலையில் சூர்யா ஹெல்த் மருத்துவமனை கே.புதுப்பட்டியில் திறக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.