கே.புதுப்பட்டியில் சூர்யா ஹெல்த் மருத்துவமனையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அடுத்த கே.புதுப்பட்டியில் சூர்யா ஹெல்த் மருத்துவமனையினை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து மருத்துவர் சுதர்சன் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கே. புதுப்பட்டியில் இன்று திமுக மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சுதர்சனின் மருத்துவமனையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். நிகழ்வில் மாநில மருத்துவர் அணி துணைச்செயலாளர் ரகு.அண்ணாமலை, அரிமளம் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்.ராமலிங்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, ஆவுடையார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் துரை,  மணமேல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.சீனியர், திருவரங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல், திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகு சிதம்பரம், மாணவரணி அமைப்பாளர் கலை, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராமசாமி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,  நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கே.புதுப்பட்டியில் இம்மருத்துவமனை திறக்கப்பட்டு இருப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தரமான மருத்துவத்திற்காக திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்களை நோக்கி செல்ல வேண்டிய சூழல் இருந்த நிலையில் சூர்யா ஹெல்த் மருத்துவமனை கே.புதுப்பட்டியில் திறக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.