புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. இதில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் எம்.தனுக்ஷ்கிருக்ஷ்ணன் 200 மீட்டர் ஃபரீ ஸ்டைல் நீச்சல் பிரிவு மற்றும் 100 மீ பட்டர்பிளை நீச்சல் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஏழாம் வகுப்பு மாணவர் எம்.நிக்ஷாந்த் கிருக்ஷ்ணன் 200 மீட்டர் ஃபரீ ஸ்டைல் நீச்சல் பிரிவில் முதலிடமும் மற்றும் 50 மீ ஃபரீ ஸ்டைல நீச்சல் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளார்.
மாவட்ட அவளிலான நீச்சல் போட்டிகளில் சாதனை புரிந்து பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் துணை முதல்வர் குமாரவேல் ஆகியோர் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.