பணி பாதுகாப்பு கேட்டு  பழனியில் மருத்துவர்கள்  ஆர்ப்பாட்டம்

சென்னையில் மருத்துவர் பணியில் இருந்த போது தாக்கப்பட்டதை கண்டித்து பழனி அரசு மருத்துவமனை மருத்துவப்பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதன்கிழமை சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படித்தியிள்ள நிலையில் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் மருத்துவ சங்கம் மூலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இணைந்து பழனி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு தவிர மற்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ  பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் எனவும், மருத்துவரை தாக்கிய குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் இது போன்ற சம்பவம் நடக்காத வண்ணம் தமிழக அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு பேட்ஜ்களை அணிந்து  பழனி அரசு மருத்துவமனை முன்பு 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்,செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.