புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்கும் வகையில் இன்று “VAIRAMS EXPO” நடைபெற்றது.
இதில் 3 முதல் 11ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளியில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டு 500 மாதிரி வடிவமைக்கப்பட்டு 600 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ், அறிவியல், சமுக அறிவியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும், மாணவர்கள் உற்சாகத்தோடு பங்கேற்று தங்களது திறமைகளை பல வடிவங்களில் வெளிப்படுத்தினர். மருத்துவத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வுகள், புற்றுநோய் உருவாகுதல், அதற்கான சிகிச்சை முறைகள், நெகிழியால் நிலத்திற்கு ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தமிழ்த் திருவிழாக்கள், நிலநடுக்கம், கோட்டைகள், போர்களத்தில் மருத்துவ சிகிச்சை முறைகள், மனித பரிணாமம், உடல் உறுப்புகளின் இயக்கங்களையும், இயற்கை காட்சிகளையும், கோள்களின் இயக்கங்களையும் கண்முன்னே நிகழ்த்தி காட்டினர்.
ஆசிரியர்களும் பலவித மாதிரி வடிவங்களையும் அமைத்து பார்வைக்கு வைத்தனர். இவ்விழாவில் பெற்றோர்களே நடுவர்களாகப் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கியும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு விழாவிற்கு மெருகேற்றினர்.