புதுக்கோட்டை ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சிறப்பு முகாம்

மாநில அரசு ஓய்வூதிய தாரர்கள்.குடும்ப ஓய்வூதியதா ரர்கள், முன்னாள் ராணுவத்தி னர் ஆகியோர் டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான சிறப்பு முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாம்களில் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண், மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைரேகை / பேஸ் ரெக்கனிஷன் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்தனர் இதற்கு சேவை கட்டணமாக ரூ70 வசூலிக்கப்பட்டது. இந்த சிறப்பு முகாம் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை  நடைபெற்றது.

எனவே அனைத்து ஓய்வூதியதாரர்களும் இந்திய அஞ்சல் துறையின் இந்த சேவையை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்று புதுக்கோட்டை கோட்டம்  அஞ்சல் கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.