தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை வட்டக்கிளையின் 15-வது மாநாடு நேற்று மாலை 5.00 மணியளவில் புதுக்கோட்டை அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டிற்கு வட்டக்கிளைத் தலைவர் தோழர் ஆ.வள்ளியப்பன் தலைமை தாங்கினார். தோழர் மு.கருப்பையா வரவேற்புரை ஆற்றினார். வட்டக்கிளைச் செயலாளர் தோழர் சே.ராஜேஸ்கண்ணன் அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் தோழர் ரமா ராமநாதன் துவக்கவுரை ஆற்றினார். தோழமைச் சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.
இம்மாநாட்டில் தோழமைச் சங்க நிர்வாகிகள், வருவாய்த்துறை தோழர்.சுபா, சாலைப்பணியாளர் சங்கம் தோழர் முத்துக்கருப்பன், சத்துணவுத்துறை தோழர் ராஜமாணிக்கம், தோட்டக்கலைதுறை தோழர்.சின்னகருப்பன், வருவாய்த்துறை தோழர் பழனிச்சாமி வாழ்த்துரை வழங்கினர்.
இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக, புதுக்கோட்டை பொது அலுவலக வளாகக் கிளை தலைவர் தோழர் மு.கருப்பையா, துணைத் தலைவர்கள் தோழர் ஆ.வள்ளியப்பன், தோழர் எல்.தினேஷ்பாபு, தோழர் ஆர்.சிவக்குமார், தோழர் வடிவேல், செயலாளர் தோழர் சே.இராஜேஸ் கண்ணன், இணைச் செயலாளார்கள் தோழர் எஸ்.சண்முகம், தோழர் தினகரன், தோழர் எம்.ராஜன், பொருளாளர் தோழர் சிவகுருநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கிளை நிர்வாகிகளாக, தலைவர் தோழர் ப.திருப்பதி, துணைத் தலைவர்கள் தோழர் ரெங்கராஜ், தோழர் ப.முத்துக்கருப்பன், செயலாளர் தோழர் நயினப்பன், தோழர் எஸ்.சையது நூர் முகமது, இணைச் செயலாளார்கள் தோழர் ரா.பிரகாஷ்மூர்த்தி, தோழர் இரா.முருகன், தோழர் சௌந்திரராஜன், பொருளாளர் தோழர் ரா.ரகுராம், மகளிர் அமைப்பு தோழர் லெ.பானுப்பிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக, மாவட்டச் செயளர் தோழர் இரா.ரெங்கசாமி நிறைவுரை வழங்கினார். மாவட்ட ஆட்சியரக வட்டக்கிளை தோழர் ப.திருப்பதி நன்றி கூறினார்.