சவுதி அரேபியா ரியாத்தில் மரணம் அடைந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவருடைய உடலை இந்திய தூதராக உதவியுடன் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அமைப்பினர் தாயகம் அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் வட்டம், புக்கலம் கிராமம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஐயப்பன் என்பவர் சவுதி அரேபியா ரியாத்தில் கட்டுமான பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் தங்கி இருந்த அறையில் மரணம் அடைந்தார். ஐயப்பனின் உறவினர் கஜேந்திரன் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மண்டல தலைவர் மீமிசல் நூர் முகம்மதுவை தொடர்பு கொண்டு ஐயப்பனின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்க உதவி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.
ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகிகள் விரைந்து செயல்பட்டு இந்திய தூதரகத்தின் உதவியுடன் அனைத்து பணிகளையும் முடித்து ரியாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்திற்கு சென்றடைந்த ஐயப்பனின் உடலை திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஐயப்பனின் உறவினர்கள் ஐயப்பனின் உடலை பெற்று தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் ஐயப்பனின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டம் புக்கலம் கிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு சேர்த்தனர்.
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளான வளைகுடா பொறுப்பாளர் மாநில பொருளாளர் பொறியாளர் சபியுல்லா கான், மண்டல தலைவர் மீமிசல் நூர் முகம்மது, சமூகநல செயலாளர் சாதிக் பாஷா, மண்டல இணைச் செயலாளர் திருக்கோவிலூர் ஷாக்கீர் பேக், துணைச் செயலாளர் காட்டுவா அஜ்மீர், திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பசல் முஹம்மது, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் முகமது அலி, கள்ளக்குறிச்சி மாவட்ட தொண்டரணி செயலாளர் நிஷாத் உசேன் புகாரி, தமுமுக நகரத் தலைவர் சையது சைஃப், நகர செயலாளர் சையது ஹயும், தமுமுக துணை செயலாளர் செளகத் அலி, மமக துணை செயலாளர் ஷேக் சுபி, நகர பொருளாளர் ஷாகுல் ஹமீது, தொண்டரணி சையது அனிஸ் மற்றும் சப்தர் அலி, அஸ்லம் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ஐயப்பன் குடும்பத்தினர்கள், உறவினர்கள், ஊர் மக்கள் அனைவரும் நன்றி கூறினார்கள்.