ஜம்மு காஷ்மீரில் கான்யாரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு

ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரான கான்யாரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, “நகரின் கான்யார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் இன்று அங்கு சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், தங்கள் மீதான தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். அதனைத் தொடந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏன்றாலும் இரு தரப்பு பகுதிகளிலும் உயிர்ச் தேசம் குறித்து எந்த வித தகவலும் இல்லை” என்று தெரிவித்தனர்.