கந்தர்வக்கோட்டையில் தீபாவளியுடன் மை பாரத் எனும் தூய்மை நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் கந்தர்வகோட்டை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய தீபாவளியுடன் மை பாரத் எனும் தூய்மை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கந்தர்வக்கோட்டையில் நடைபெற்றது.

மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எமது இளைய பாரதம் (மை பாரத் ) எனும் துறை துவங்கி  முதலாம் ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலும் தூய்மையான பாரதம் என்பதனை வலியுறுத்தும் வகையிலும் தீபாவளி திருநாளை தூய்மையாக கொண்டாடுதலை நோக்கமாகக் கொண்டு கந்தர்வகோட்டை நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தூய்மை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூய்மை பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் மை பாரத் அடையாள சின்னங்களும்  பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை அரசினர் பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வகுமார் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள் கஸ்தூரி மற்றும் திருமணி ஆகியோர் பங்கேற்று சிறப்பாக செய்திருந்தனர்.