புதுக்கோட்டை மாவட்ட ஏரிப்பாசன சங்கத் தலைவர் ராம். சுப்பையா விடுத்திருக்கும் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. புதுக்கோட்டைமாவட்டத்திற்கு 1கோடிமட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு முழுமையாக பாதிக்கப்பட்டும் தவறான புள்ளி விவரங்கள் மூலம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்சூரன்சு கம்பெனிகள் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.புள்ளிவிபரங்களில் விவசாயிகளுக்கு அதிருப்தி உள்ளது. சாவி அறுத்த நிலங்களுக்கு க்கூட இழப்பீடு இல்லை.பயிர்க்காப்பீடு நோக்கமே முறியடிக்கப் பட்டுள்ளது.ஆவுடையார்கோவில் தாலுகா அரிமளம் ஒன்றியம் ஏம்பல், இரும்பாநாடு, குருங்களூர், மதகம், திருவாகுடி ஊராட்சிகளில் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காததால் 19.10.2024 பஸ் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு வட்டாட்சியரால் சமாதானக் கூட்டங்கள் இருமுறை நடத்தியும் இன்சூரன்ஸ் துறையினர் புள்ளி விவரங்கள் தரவில்லை என்பதால் 25.10.2024. வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். கோட்டாட்சியர் தலையிட்டு விவசாயிகளுக்கு சமாதானம் கூறி மாவட்ட ஆட்சியர் மூலமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆட்சியர் தலையிட்டு சுமூகத்தீர்வு ஏற்படுமாறு செய்ய வேண்டும். காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி அரசு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு பின் இன்னாள் முதல்வர் ஒதுக்கீடு செய்தது எவ்வளவு? அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.