புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

புதுக்கோட்டை மச்சுவாடியில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இக்கல்வி ஆண்டில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்களுக்கான முதல் கூட்டம் அக்டோபர் 25 இன்று நடத்தப்பட்டது. கூட்டத்தினை பள்ளி முதல்வரும் கூட்ட அழைப்பாளருமான பெ.சிவப்பிரகாசம் தலைமையேற்று நடத்தினார்.

கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கலைமணி முன்னிலை வகுத்தார். கூட்டத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழுவானது எவ்வாறு இனி வருங்காலங்களில் பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பள்ளி வளர்ச்சி மற்றும் பள்ளி கட்டமைப்பு, மாணவர்களது கற்றல் கற்பித்தல் முன்னேற்றம் , தேர்ச்சி மற்றும் மாணவர் சேர்க்கை அதிகரித்தல் குறித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

இந்நிகழ்வில் பள்ளி முன்னாள் மாணவர் சிவசக்திவேல்,கல்வியாளர் ஜெயசிங் மற்றும் பெற்றோர் உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் பள்ளி வளர்ச்சி குறித்தும் மாணவர்களது சேர்க்கை மற்றும் ஒழுக்கம், தேர்ச்சி விகிதத்தினை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் ஆக்கப்பூர்வமான தமது கருத்தினை வழங்கினர். முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியர் இன்பராஜ் வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்கான ஏற்பாட்டினை  ஆசிரியர் பிரபு ஏற்பாடு செய்திருந்தார். இறுதியாக ஆசிரியர் பிரதிநிதி ராதா வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.