புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து உலக போலியோ ஒழிப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அக்டோபர் 24 போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ரோட்டரி மாவட்டம் 3000தின் ஆளுநர் இராஜா கோவிந்தசாமி ஆலோசனையின் படி புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து புதுக்கோட்டை பிருந்தாவனத்தில் போலியோ ஒழிப்பு தின விழிப்புணர்வு பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி போலியோ சேர்மன் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவாஜி, துணை ஆளுநர் லட்சுமணன் செய்திருந்தனர். நிகழ்வில் புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் பசுபதி, மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் மாரிக்கண்ணு, சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் கண்ணன், கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் சு.சிவசக்திவேல், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் தங்கராஜ், பொறியாளர் கனகராஜன், சாலை பாதுகாப்பு விழிப்புணர் சங்கத் தலைவர் மோகன்ராஜ், பிரகாஷ், சுபா கர்ணா, கலாவதி பிரித்திவிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

போலியோ பற்றிய தகவல்களால் இந்திய குழந்தைகள் போலியோ நோயிலிருந்து இன்று பாதுகாக்க பட்டுள்ளனர். இந்தியர்களாகிய நாம் நமது பாதுகாப்பை மீண்டும் உறுதி செய்வோம். முன்பொரு காலத்தில் ஊருக்குள் பலரை முடமாக்கிய போலியோவை ரோட்டரி வீரர்களின் துணைகொண்டு விரட்டினோம். ஆனாலும் அண்டை நாடுகளில் தொடரும் போலியோவின் பாதிப்புகளும் பரவிடும் அச்சுறுத்தலும் தொடர்கிறதே, நாம் நமது குழந்தைகளை இன்னும் விழிப்புடன் பாதுகாக்க பட வேண்டும். அதற்கு நெஞ்சில் உறுதியும், நிறைந்த நிதியும் நமக்கு தேவை. போலியோ இனியும் வரவிடாமல் தடுப்போம் விழிப்புடன் இருப்போம். ரோட்டரியின் கரங்களோடு இணைந்து நமது இந்தியாவை பாதுகாப்போம் என்று கூறினார்கள்