2025 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெறவுள்ள தமிழக அளவிலான மயக்கவியல் மற்றும் தீவிரசிகிச்சை மருத்துவர்கள் மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சியாக “தூக்கம் தரும் தோழன்” என்ற தலைப்பில் தமிழ் கவிதைப்போட்டி நடைபெற்றது.
இக்கவிதைப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரியும் டாக்டர் மு.பெரியசாமியும் கலந்துகொண்டார். அக்கவிதைப்போட்டியின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் டாக்டர் மு.பெரியசாமி கவிதை முதல் பரிசை பெற்றுள்ளது. அதில் அவர் ஒரு மருத்துவர் எந்த அளவிற்கு சிகிச்சை பெறுபவரின் நம்பிக்கை பாத்திரமாக இருந்து, உணர்வுகளை மதிக்கிறார், வலிகளை நீக்கி உறக்கத்தை தருகிறார், உயிரை காப்பாற்றுகிறார் என்பதை கவிதையில் வடித்திருக்கிறார்