ஆதிகாலத்து அலங்கார மாளிகையில் அலைமோதும் மக்கள் கூட்டம்

புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி மற்றும் பொன்னமராவதி அண்ணா சாலையில் உள்ள ஆதிகாலத்து அலங்கார மாளிகை ஜவுளி கடையில் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால் மக்கள் அனைவரும் புத்தாடைகள் வாங்குவதில் அதிகமாக ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் ஆதிகாலத்து அலங்கார மாளிகையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் ஆண்டுதோறும் வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப பல்வேறு புதிய டிசைன்கள் மற்றும் மாடல்கள் விற்பனை செய்யப்படுவது இந்நிறுவனத்தின் சிறப்பாக உள்ளது. தீபாவளி விற்பனைக்காக இந்த ஆண்டும் புதிய மாடல்களில் ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு புதிய அறிமுகமாக இம்போர்ட் எம்போஸ்ட் சர்ட், 6 பாக்கெட் ஜாக்கெர் பாண்ட்,சாப்ட் சில்க் பிராக், பட்டு மிடி, சாப்ட் சில்க் சுடிதார், லிச்சி சாரீஸ், டிஸு சாரீஸ், சில்வர் புட்டி சாரீஸ், லினன் எம்ப்ராய்ட் சாரீஸ், சில்வர் ஜாப் பட்டு, ஜல்சா லினன் காட்டன், பனானா சில்க், டெனிம் சர்ட், பாப்கான் சர்ட், லினன் சர்ட் என ஆயிரத்துக்கும் அதிகமான மாடல்களில் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிர்வாக இயக்குனர் ஜெயபால் கூறுகையில்; பட்டு சேலைகள், பேன்சி சேலைகள், காட்டன் சேலைகள், சிந்தடிக் சேலைகள், சல்வார், சுடிதார், ஆண்களுக்கான பிராண்டட் ஆடை ரகங்கள், சர்ட்டிங்ஸ் குழந்தைகளுக்கான பாய்ஸ், கேர்ள்ஸ் ரெடிமேட் மற்றும் அனைத்து ஆடைகளும் தீபாவளிக்கு என்று வந்து குவிந்துள்ளது. புதுக்கோட்டை, பொன்னமராவதி ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிறுவனம் வாடிக்கையாளர்களின் கைராசியான கடையாகும் என்றும்,  இதனை பயன்படுத்தி வாங்கி இந்த தீபாவளியை ஆதி காலத்தோடு சேர்ந்து பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடி மகிழுமாறு கூறினார்.