பச்சை பூமி அமைப்பின் தலைவர் கவிஞர் வேங்கை ஆரோனின் கவிதை நூல்கள் வெளியிட்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை, பி.எம்.எஸ்.எஸ்.எஸ். அரங்கில் பச்சை பூமி அமைப்பின் தலைவர் கவிஞர் வேங்கை ஆரோனின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மூன்று நூல்களையும், தங்கம்மூர்த்தி நான்கு நூல்களையும்,  புதுகை வரலாறு நாளிதழின் ஆசிரியர் சு.சிவசக்திவேல் மூன்று நூல்களையும், லியோபெலிக்ஸ், ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரி தாளாளர் மூன்று நூல்களையும்,  ஜே குரூப்ஸ் செயலாளர் ஆண்டனி ராஜா மூன்று நூல்களையும் மொத்தமாக பதினாறு கதை, கவிதை, பாடல் நூல்களையும் வெளியிட்டனர்.

கவிச்சுடர் கவிதைப்பித்தன் தனது சிறப்புரையில் வேங்கை ஆரோனின் எளிமையும், அர்ப்பணிப்பும், கவிதையும் கொண்டாடப்பட வேண்டியவை என்று பாராட்டினார். கவிதைகளை இன்னும் வடிகட்டும்போது கவிஞர் வேங்கை ஆரோன் தனது துறையில் கொடிகட்டிப் பறப்பார் என்று தங்கமூர்த்தி வாழ்த்தினார். புதுகை வரலாறு நாளிதழின் ஆசிரியர் சிவசக்திவேல், கவிதை உலகில் பதினாறு நூல்கள் வெளியிட்டது ஒரு கின்னஸ் சாதனை அளவிற்குச் சென்றிருக்கிறது என்று பாராட்டினார். நீதியரசர் பாலசுப்பிரமணியன், மேயர் திலகவதி செந்தில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சந்திரா ரவீந்திரன், அருள்திரு பபியான், அருள்திரு இருதயராஜ், சத்யராம், ராமுக்கண்ணு, பேராசிரியர் விஸ்வநாதன், கவிஞர் மகாசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். சாந்தம் சவரிமுத்து, கவிஞர் நிலவைப் பழனியப்பன், ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் கீதா நிகழ்ச்சியின் நெறியாளராகவும், கவிஞர் ஆண்டனி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டார்கள்.

நிகழ்ச்சியின் நிரைவில் நூலாசிரியர் கவிஞர் வேங்கை ஆரோன் ஏற்புரை ஆற்றினார். முன்னதாக ஆசிரியர் அமுதன் வரவேற்புரை நிகழ்த்த, ஆசிரியர் பாஸ்கர் நன்றி உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியைப் பச்சை பூமி தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாது, மரக்கன்றுகளையும் இலவசமாக வழங்கினார்கள்.