திருச்சி பவர் குரூப் நிறுவனத்தின் முதல் கிளையை புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா திறந்து வைத்தார்.
திருச்சி பவர் குரூப் நிறுவனத்தின் முதல் கிளையை புதுக்கோட்டை மாநகரில் பவர் குரூப் நிறுவனத் தலைவர் அப்துல் காதர் முன்னிலையில் எம்எல்ஏ முத்துராஜா இன்று திறந்து வைத்தார். விழாவில் சிஇஓ மற்றும் டைரக்டர்கள் ரியாஸ்கான், செந்தில்குமார், மோகன், கிருஷ்ணகுமார், சரவணன், செல்வக்குமார், ரமேஷ் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அப்துல் பேசிசுகையில்: எளிய மற்றும் நடுத்தர மக்களுக்காக அவர்களது கனவு இல்லம் மனையை நியாயமான விலையில் வழங்குகிறோம். அதேபோல் முழு நேர பகுதி நேரமாக வேலை வாய்ப்பினையும் வருமானம் ஈட்டும் பணிகளையும் அளிக்கின்றோம். இதனை புதுக்கோட்டை மக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றார்.
நிகழ்வில் புதுக்கோட்டை மாநகர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் கவுன்சிலர் சுபசரவணன், ஆம் ஆத்மி புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அப்துல் ஜப்பார், விசிக புதுகை வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை டைரக்டர்கள் ராம்குமார் மற்றும் செல்வராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.