காஞ்சிபுரத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது.
சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வுகளைக் கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் பழைய மாநகராட்சி அலுவலகம், காஞ்சிபுரம் காந்தி வீதி உள்பட 4 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதேபோல் உத்திரமேரூர் பேரூராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலம் உள்பட பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் வி.சோமசுந்தரம், மாநில அமைப்புச் செயலர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் காஞ்சிபுரம் நகராட்சி தலைவர் ஆர்.டி.சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.