பொதுமக்களிடையே இருதயம் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு உலகமெங்கும் உலக இருதய தினம் அனுசரிக்கபடுகிறது.
இதனை முன்னிட்டு டீம் மருத்துவமனை வளாகத்தில் இருதய நோய் பரிசோதனை முகாம், இருதய நல சிறப்பு மருத்துவர் எம்.ஆர்.வெங்கடேசன் தலைமையில் இருதயநோய் கண்டறியும் எக்கோகார்டியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் சிறப்பு விருந்தினராக குடல் இரைப்பை சிறப்பு மருத்துவர் ஜி.வெங்கட்ராமன், பொதுநல மருத்துவர் ஏ.முத்து, அவசர மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர் பி.எல்.கோகுல் பிரசாத், குழந்தைகள் நல மருத்துவர் ஏ.ஆண்ட்ரீவ் ஸ்டீபன் மற்றும் இருக்கை மருத்துவர் சூர்ய பிரகாஷ் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் கே.ஹெச்.சலீம் கூறியதாவது: உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இருதய நோய்க்கு ஆண்டு தோறும் 20.5 மில்லயன் மக்கள் பலியாகின்றனர். இந்தியாவில் இதய நோயின் தாக்கம் தற்பொழுது அதிகமாக உள்ளது. நாளடைவில் அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் பெரும் அபாயம் உள்ளது. உலக அளவில் இந்தியாவில் தான் அதிகமான இருதய நோய்களும், அதன் காரணமாக மாரடைப்பும் ஏற்படுகிறது. டென்ஷன் மிகுந்த வாழ்க்கை, சிகரெட் பிடிப்பது, உடற்பயிற்சி இல்லாமை, கட்டுப்பாடு இல்லாத உணவு முறை, அதிக கொழுப்பு, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை மாரடைப்பு வர காரணங்கள் ஆகின்றன.
இது மட்டும் இல்லாமல், இளைய தலைமுறையினரிடம் இருதய நோய் பரவலாக அதிகரித்து வருவதற்க்கு வாழ்க்கை முறையில் ஏற்பட்டு வரும் மிக வேகமான மாற்றங்களும், மன அழுத்தமும் தான் காரணமாக கூறப்படுகிறது. நெஞ்சு வலி, மூச்சு இரைத்தல், நெஞ்சு படபடப்பு, மயக்கம், இடது தோள் பட்டை வலி, மற்றும் வியர்த்துக்கொட்டுதல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் இருதய மாரடைப்பாக இருக்கலாம். நேரம் கடத்தாமல் அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு விலை உயர்ந்த எக்கோகார்டியோகிராம் என்ற இதய கலர் டாப்புலர் ஸ்கேன், டிரட்மில் போன்ற இருதய பரிசோதனை ஓட்டம், நவீன மானிட்டர்கள், செயற்கை சுவாச கருவிகள் கொண்ட 24 மணி நேர தீவிர சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. வருமுன் காப்போம் என்ற திட்டத்தில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மாரடைப்பினால் அதிக உயிர் இழப்பு ஏற்படுகிறது. போதுமான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் மாரடைப்பு ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரத்தை (கோல்டன் ஹவர்) சரியாக பயன்படுத்தாமல் பக்கத்து நகரங்களுக்கு செல்ல நேரம் எடுத்து கொள்ளுதல் போன்ற காரணங்களால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு எல்லாத்தரப்பினருக்கும் ஏற்ற வகையில் சாதாரண கட்டணங்களுடன் முதல்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க அதிநவீன இருதய நோய் சிகிச்சை பிரிவை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம்..
உலக இருதய தினத்தை முன்னிட்டு நமது டீம் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலில் இன்று மற்றும் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மிகக்குறைந்த கட்டணத்தில் இருதய நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடக்கிறது என கூறினார்.