பழனியில் வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நுற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பழனியில் அரசு கால்நடை மருத்துவத்துறை சார்பில் நாய்களுக்கு வெறி நோயை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. முகாமில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய செல்ல பிராணிகளான நாய், பூனைகளை கொண்டு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாய் மற்றும் பூனைகளுக்கு முகாமில் ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. மேலும், நாய் மற்றும் பூனைகளுக்கு சத்து மருந்து மற்றும் சத்து மாத்திரைகள், டானிக் இலவசமாக வழங்கி செல்லப் பிராணிகள் பராமரிப்பு குறித்தும் விலங்குகள் மூலம் நோய் பரவுவதை தடுப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.