புதுக்கோட்டையில் உலக இருதய தின விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், திருச்சி அப்போலோ மருத்துவமனை, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து உலக இருதய தின விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் வி.ஆர்.எம்.தங்கராஜ் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துவங்கியது.

முன்னதாக வருகைதந்த அனைவரையும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் கண.மோகன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியினை ஏ.எம்.எஸ்.இப்ராஹீம் பாபு, சேது கார்த்திகேயன். திருச்சி அப்போலோ மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் தனவேந்தன், முத்துராமலிங்கம். முகமது அப்துல்லா ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர். திருச்சி அப்போலோ மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் ஷியாம் சுந்தர், வி.ஜெயராமன், ரோட்டரி மருத்துவ மன்ற மாவட்ட செயலாளர் கே.ஹெச்.சலீம், மா.மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜி.எஸ்.எம்.சிவாஜி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க பொருளாளர் சி.பிரசாத், மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் மாரிக்கண்ணு, சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் கண்ணன், மருத்துவர்கள் ராமதாஸ், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் அழகப்பன், சிவக்குமார், குணசேகரன், அட்வகேட் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) வி.தையல்நாயகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.  பேரணி நீதிமன்ற வளாகத்தில் துவங்கி அண்ணாசிலை, கீழ ராஜவீதி, பிருந்தாவனம் வழியாக நகர்மன்றம் வந்தடைந்தது. பேரணியில் கலைஞர் கருணாநிதி பெண்கள் கலைக்கல்லூரி, ஜெ.ஜெ. கலைக்கல்லூரி, செவிலியர் கல்லூரி, டாக்டர்ஸ் கல்லூரி, செந்தூரான் பொறியியல் கல்லூரி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பி.எஸ்.வி.கல்லூரி, செம்பியன் கல்லூரி, அன்னை கல்லூரி மாணவ, மாணவியர்கள் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் கே.ஓம்ராஜ் நன்றி கூறினார்.