புதுக்கோட்டை ரோட்டரி சங்கங்கள் சார்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

புதுக்கோட்டையில் உள்ள ரோட்டரி சங்கங்கள் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை  மாவட்டம்  ஏமாத்தூரில் உள்ள வள்ளலார் மாணவர் இல்லத்திற்கு புதுக்கோட்டை ரோட்டரி,  கிரவுன் சிட்டி ரோட்டரி,  மகாராணி ரோட்டரி சங்கங்கள் சார்பில் ஒரு நாள் மூன்று வேளை உணவு, 7 சூரிய ஒளி மின்விளக்குகள் மற்றும் இன்வெர்ட்டர் மெஷின், பேட்டரி வழங்கும் நிகழ்வு இன்று நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக  கருர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத்தின்  முன்னாள் தலைவர்  மீனா சுப்பையா சிறப்பு விருந்தினராகவும், புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் சேவியர் கவுரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில்  புதுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் பசுபதி  மகாராணி ரோட்டரி சங்கத் தலைவி  மாரிக்கண்ணு வைரவன்  கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் சிவசக்திவேல்  உள்ளிட்டோர் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உபகரணங்களை வழங்கினர்.

நிகழ்வில்  மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவாஜி,  துணை ஆளுநர்கள் லட்சுமணன், பாபு ஜான்  உள்ளிட்ட மூன்று சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில்  ரோட்டரி மாவட்டம் 3000த்தின்  மாவட்ட ஆளுமைகள்  முன்னாள் கவர்னர்  சொக்கலிங்கம், டாக்டர் ராமதாஸ்,அருணாச்சலம் உள்ளிட்ட மூன்று சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள்  கலந்து கொண்டு வள்ளலார் இல்ல மாணவர்களுக்கு உணவு பரிமாறியும்  அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டும்  தங்களது  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வு மிகுந்த உன்னதமாக நடைபெற்றதாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள  வாய்ப்புகள் ஏற்படுத்தி தந்த மூன்று ரோட்டரி சங்கங்களுக்கும் தனது  பாராட்டுகளை தெரிவிப்பதாக மீனா சுப்பையா தெரிவித்தார்.