சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் இன்று கல்லூரி நிர்வாகமும் திருப்பத்தூர் வட்ட சட்ட பணிகள் குழுவும் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி பெறுப்பு முதல்வர் முனைவர் ரமாதேவி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் சட்ட பணிகள் குழுவின் சார்பில் வழக்குரைஞர் முருகேசன் மற்றும் வழக்குரைஞர் ராஜ்மோகன் ஆகியோர் அடிப்படை சிவில் சட்டம், இணைய வழி குற்றங்கள் மற்றும் அது தொடர்புடைய விழிப்புணர்வு, பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து கருத்துரையாற்றினர்.

நிகழ்ச்சியினை திருப்பத்தூர் வட்ட சட்ட பணிகள் குழுவின் உதவியாளர் மாரிக்கண்ணு மற்றும் வ.செ.சிவ. அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை கௌரவ விரிவுரையாளர் ரமேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முன்னதாக வரலாற்றுத் துறை கௌரவ விரிவுரையாளர் சஞ்வீகுமார்  வரவேற்புரையாற்றினார். தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் முருகேசன்  நன்றி கூறினார். இளையராஜா, முத்துராமன், அமுதா மற்றும் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.