நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா

நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கம் தோட்டக்கலையில் பணியாற்றும் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்கக் கோரியும், ஊதிய உயர்வு உயர்த்தி தரக் கோரியும் சுரங்கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக வீடு, நிலம் கொடுத்தவர்கள் நெய்வேலி என்எல்சி சுரங்கம் இரண்டில் தோட்டக்கலையில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களாக 80 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அதில் பணியாற்றி வரும் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்கக் கோரியும், ஊதிய உயர்வு உயர்த்தி தரக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இந்த நிலையில் என்எல்சி நிர்வாகம் இவர்களுக்கு ஊதிய உயர்வு தரவில்லை, நிரந்தர வேலை வழங்கவில்லை. இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை முதல் சுரங்கம் இரண்டின் நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.