புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் இண்ட்ராக்ட் கிளப் பணியேற்பு விழா

புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இண்ட்ராக்ட் கிளப் பணியேற்பு விழா தலைவர் மாரிக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.

இண்ட்ராக்ட் தலைவராக ஆர்த்தி, செயலாளராக ராமச்சந்திரன், பொருளாளராக ஸ்ரீபரமேஸ் பணியேற்றுக்கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவாஜி, துணை ஆளுநர் லெட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில், முன்னாள் தலைவர் கருணைச்செல்வி, இண்ட்ராக்ட் குவாடினேட்டர் செளபக்கியாலெட்சுமி, செயலாளர் கலாவதி பிருத்திவிராஜ், பொருளாளர் மீனுகணேஷ், இண்ட்ராக்ட் சேர்மன் சுகண்யா முரளி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். முன்னதாக, இதேபொன்ற நிகழ்வு குத்தூஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.