கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தின் நிறுவனநாள் கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளர் கவிதா சுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்து தனது தலைமை உரையில் வாழ்க்கையை செவ்வனே வாழ அடுத்தவர்கள் மீது குறை சொல்லாமல் தன்னைத் திருத்தி, மாற்றி அமைத்தும் திறமைகளை வளர்த்து கொள்ள தினமும் தொடர் பயிற்சி செய்தால் வாழ்க்கையை செவ்வனே வாழலாம் பிறரையும் வாழ்விக்கலாம் என்று உரையாற்றினார். இயக்குனர் அனிதா ராணி முன்னிலை வகித்தார். முதலமாண்டு மேலாண்மையியல் முதுநிலை மாணவர்களுக்கு, இன்றைய நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன எவ்வாறு நம்மை அதற்கு தயார்படுத்திக் கொள்வது என்றும்
முதலாளி தொழிலாளிகளிடையே சமூக உறவைப் பற்றியும், முதாளியிடம் எச்சூழலில் ஆமாம் என்று சொல்ல வேண்டும் என்றும், எப்பொழுதும் நமது தலைமைகள் சரியாகவே இருப்பார்கள் அவர்களை மதிக்க கற்றுக்கொள்ளவும் வேண்டும் என்று மேலாண்மையின் பொன்மொழிகளையும் பட்டியலிட்டு, டிவல்கர்2024 செய்தி இதழை வெளியிட்டு, மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்தி பேசினார் திருமால் அழகன், பேராசிரியர், அண்ணா பல்கலை கழகம், திருச்சி. பேராசிரியர் ஜெனிபாமேரி வரவேற்றார், பேராசிரியர் சாமிநாதன் நன்றியுரை கூறினார். பேராசிரியர் அமிர்தா நிகழ்வை ஒருங்கிணைத்தார். விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது