குற்றாலத்தில் சாரல் ரோட்டரி சங்கம் சார்பில் 5  மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு  சீர்வரிசைகளுடன்  திருமணம்

oppo_0

தென்காசி மாவட்டம், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் சார்பில் ஐந்து மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு சீர் வரிசைகளுடன் மும்மதங்களின் பிரார்த்தனையுடன்  திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 

குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐந்து மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு காசிமேஜர்புரம் முருகன் மஹாலில் மும்மதங்களின் பிரார்த்தனையுடன் திருமணம் நடத்தி வைத்தனர். ஏராளமான சீர் வரிசைகளுடன் இந்த திருமணம் நடைபெற்றது. 

இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு சாரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் டி.ஆர்.எஸ்.முத்துராமன் தலைமை வகித்தார். ரோட்டரி கவர்னர் மீரான் கான் சலீம், கவர்னர்  (தேர்வு) காந்தி, முன்னாள் கவர்னர்கள் கே. ராஜகோபால், ஆறுமுக பாண்டியன், சேக் சலீம், மேஜர் டோனர் பாலாஜி, கிரானைட்ஸ் பி.எஸ்.சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் முருகையா, அமர் சேவா சங்க நிறுவனர் பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கரநாராயணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்  ராணி ஸ்ரீ குமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் சதன் திருமலைக்குமார்,  பாஜக மாவட்ட தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா, தென்காசி நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். மும்மத பிரார்த்தனைகளுடன் ஐந்து ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி மீரான் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அப்துல் அஜீஸ்,  மாரிமுத்து, மாடசாமி ஜோதிடர், முருகன் ராஜ், எல்.முரளிதரன், கனகசபை, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர்  டாக்டர் டி.ஆர்.எஸ்.முத்துராமன், செயலாளர் திலீப், பொருளாளர் ராமகிருஷ்ணன், துணை ஆளுநர் சேகர், முன்னாள் துணை ஆளுநர்கள் செல்வகணபதி, சுப்புராஜ், மற்றும் பெரிய பிள்ளை வலசை க.இ.வேல்சாமி, பி.பி.முருகேசன், ரமேஷ், மாரிமுத்து, அசோக், மாரிமுத்து பாண்டி, ஜீவானந்தம், ஜனார்த்தன பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம், எம்.கே.ஆர்.முகைதீன், என்.வெங்கடேஸ்வரன்,  சுல்தான், பாதுஷா, லட்சுமி நாராயணன், முருகன், நரேஷ், அகஸ்தீஸ் குமார், சதீஷ், பிலிப், சுபாசேகர், குமார், மோகன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர். 

தென்காசி மாவட்ட முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சியின் நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள்  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களையும், இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குற்றாலம் சாரல் ரோட்டரி சங்க நிர்வாகிகளையும் வாழ்த்தினார்கள்.