புதுக்கோட்டை மாவட்டம், கலியராயன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 29-08-2024(வியாழக்கிழமை) ஆண்டாய்வு முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமையிலும், அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் ( பொ) ஜெயந்தி முன்னிலையிலும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நடவேண்டிய அவசியத்தை வலியுறுத்திக்கூறினார்.
இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரபாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், முதன்மைக் கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளர் கி. வேலுச்சாமி அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளர் இளையராஜா, உடற்கல்வி ஆசிரியர் முத்தையன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.