சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குடல் புழு நீக்க தின விழா

சங்கரன் கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடல் புழு நீக்க தின விழா நடைபெற்றது. 

மாவட்ட சுகாதார அலுவலர்  மருத்துவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் கோமதி, மாவட்ட பூச்சியல் வல்லுனர் ராமலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பால குமார், பள்ளி தலைமை ஆசிரியை கீதாவேணி, திமுக நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.

இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் கலந்துகொண்டு மாணவிகளுக்கு குடல் புழு நீக்க தினத்தை முன்னிட்டு அல்பண்டசோல் மாத்திரைகளை வழங்கினர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் டாக்டர் மகாலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சமுத்திரம், நகராட்சி கவுன்சிலர் முப்பிடாதி, சுகாதார ஆய்வாளர் ஆனந்த் ராஜ், சுபாஷ், குகன், பகுதி சுகாதார செவிலியர் சாந்தி, நகர்ப்புற செவிலியர் இந்திராகாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.