புதுக்கோட்டை மாவட்டம் லேனாவிளக்கில் அமைந்துள்ள மௌண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளியில் முதலுதவி மருத்துவ பயிற்சி முறைகள் பற்றி மாணவர்களுக்கு புதுக்கோட்டை பி.வெல் மருத்துவமனை துணை மருத்துவ அதிகாரி டாக்டர் அருண்குமார் தலைமையில் மருத்துவ உதவியாளர்கள் குழு, மௌண்ட் சீயோன் பள்ளியின் இணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி, மெட்ரிக் பள்ளியின் முதல்வர் கிருபா ஜெபராஜ் ஆகியோர் தலைமையில் அடிப்படை வாழ்க்கைக்கு துணை புரியும் முதலுதவிகள் குறித்த பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் டாக்டர் அருண்குமார் மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யப்படும் முதலுதவிகள், திடீர் விபத்தில் செய்யப்படும் முதலுதவிகள், இளைப்பு நோய் ஏற்படும் போது செய்யப்படும் முதலுதவிகள், மின்சாரம் தாக்கும் போது செய்யப்படும் முதலுதவிகள் ஆகியவை குறித்து செயல்முறைகள் வழியாக மாணவர்கள் எளிய முறையில் புரிந்து கொள்ளும் விதமாக தமது குழுவோடு சேர்ந்து விளக்கினார். அவசர காலங்களில் மாணவர்கள் எவ்விதமாக செயல்பட வேண்டும் என்பதை பற்றி மிகத் தெளிவாக விளக்கியதை பாராட்டி பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி நன்றியுரை கூறினார். பள்ளியின் இணைத் தலைவர் வாழ்த்துரை வழங்கினார். இப்பயிற்சியிலிருந்து மாணவர்கள் அவசர நேரங்களில் உதவும் முதலுதவி திறனை வளர்த்துக் கொண்டனர்.