பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான 10 கிலோ மீட்டர் ஒடக்கூடிய கிராஸ் கண்ட்ரி போட்டி புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியினை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்,ரகுபதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் பல்கலைக்கழக ஆளுமைக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்குபெற்றனர். இவற்றில் பெண்கள் பிரிவில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். தொடர்ந்து புதுகை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி அணி மற்றும் திருச்சி ஹோலி கிராஸ் அணியினர் இரண்டு, மூன்று மட்டும் நான்காமிடத்தை பிடித்தனர்.
முதல் 6 இடங்களை பெறும் போட்டியாளர்கள் அகில இந்திய கிராஸ் கண்ட்ரி போட்டியில் பல்கலைக்கழகத்தின் சார்பாக கலந்துகொள்ள உள்ளனர். பெண்கள் பிரிவில், முதலிடம்-மு.சுதா, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி, இரண்டாமிடம்-சந்தியா, புனிதவளனார் கல்லூரி, திருச்சி, மூன்றாமிடம்-ஆர்த்தி, கலைஞர் கருணாநிதி பெண்கள் கல்லூரி, புதுக்கோட்டை, நான்காமிடம்-லலிதா, அரசு கல்லூரி, ஸ்ரீரங்கம், ஐந்தாமிடம்-வினோதினி, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி, ஆறாமிடம்-வாசுகி, விகாஸ் கல்லூரி.
ஆண்கள் பிரிவில், முதலிடம்-வி.விஸ்வா, செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி, இரண்டாமிடம்-கே.ஆதிகேசவன், மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, மூன்றாமிடம்-கே.செல்வேந்திரன், செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி, நான்காமிடம்-எஸ்.வல்லரசு, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி, ஐந்தாமிடம்-எம்.முகேந்திரன், செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி, ஆறாமிடம்-ஆர்.தனுஷ்கோடி, செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் கலந்துகொண்டு பரிசு கோப்பையும், சான்றிதழ்களையும் வழங்கினர். முன்னதாக கல்லூரி உடற்கல்வி துறைத்தலைவர் முனைவர் மு.ஜெகதீஸ் பாபு அனைவரையும் வரவேற்றார். பல்கலைக்கழக விளையாட்டுக் குழு செயலர் முனைவர் மஹபூப்ஜான் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் பரசுராமன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை வாழ்த்தி பேசினார். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் ஐ.ஜான் பார்த்திப்ன நன்றி கூறினார்.